கரூரில் வெற்றியடைந்த வேட்பாளர் ஜோதிமணிக்கு சான்றிதழ் வழங்கும் போது செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றார். பின்னர் சான்றிதழ் வழங்கும் அறைக்குள் செய்தியாளர் செல்லும் போது, பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
அனுமதி அட்டை காண்பித்தும் செய்தியாளர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனை கண்டித்து செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.