ஸ்விட்சர்லாந்தில் போர் விமானத்தின் செயல் திறனைப் பரிசோதிக்கும் வகையில், சாலையில் தரையிறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, அந்த நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அவெஞ்சஸ் மற்றும் பயர்னே நகரங்களில், சாலையில் எஃப்/ஏ-18 ரக விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு மீண்டும் வானை நோக்கி பறந்தது.
அப்போது விமானத்தின் அனைத்து பாகங்களும் சீராக செயல்பட்டதாக விமானி தெரிவித்துள்ளார். விமானம் சாலையில் தரையிறங்கியதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.