டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை நிராகரித்துள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கலால் கொள்கை பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் மருத்துவ காரணங்களுக்காக 7 நாட்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரின் நீதிமன்ற காவலை ஜூன் 19 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.