பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில், ஜூன் 8ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் புதிய அரசுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் பிரதமராக வரும் 8ஆம் தேதி மோடி பதவி ஏற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான பதவி ஏற்பு இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டம் ஜூன் 7 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.