நேபாளத்தில் அருண்-3 புனல் மின் திட்டத்தின் இறுதி குகைப் பாதைப் பணியை நேபாள பிரதமர் தொடங்கிவைத்தார்.
நேபாளத்தின் சங்குவா சபா மாவட்டத்தில் உள்ள அருண்-3 புனல் மின் திட்டத்தில் 900 மெகாவாட் மின்சாரம் கொண்டு செல்லும் குகைப் பாதைப் பணியை நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா தொடங்கிவைத்தார்.
இந்த சுரங்கப் பாதையை எஸ்ஜெவிஎன் துணை நிறுவனமான அருண்-3 மின்சார மேம்பாட்டுக்கான தனியார் நிறுவனம் கட்டமைக்கிறது.
அருண் நதிப்படுகையில் மின் உற்பத்தி செய்வதன் மூலம் பிராந்திய எரிசக்தி பாதுகாப்பை விரிவுபடுத்துவதையும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நேபாள எரிசக்தி, நீர்வளம், பாசனத்துறை அமைச்சர் திரு சக்தி பகதூர் பாஸ்நெட், நேபாளத்துக்கான இந்திய தூதர் திரு நவீன் ஸ்ரீவத்சவா, எஸ்ஜெவிஎன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுஷில் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்றோரிடையே உரையாற்றிய நேபாள பிரதமர், உரிய காலத்தில் திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டுத் தெரிவித்தார். தூய்மையான எரிசக்தி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், பிராந்தியத்தின் நீடித்த வளர்ச்சிக்கு உதவும் என்று அவர் கூறினார்.