நாமக்கல்லில் உள்ள பயிற்சி மையத்தில் பயின்ற 4 மாணவர்கள் நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் சாதனை படைத்தனர்.
இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்று அதற்கான முடிவுகள் வெளியானது.
இதில் நாமக்கல் கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் படித்த மாணவி ஜெயதி பூர்வஜா, மாணவர்கள் சபரீசன், ரோஹித் , ரஜனீஷ் ஆகிய நான்கு பேரும் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளனர்.
அவர்களுக்கு பயிற்சி மைய தலைவர் சரவணன் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.