நாடாளுமன்ற தேர்தலில் வென்று 3வது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் விதமாக 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது.
இதனை கொண்டாடும் விதமாக திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஜூன் 4ஆம் தேதி பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பாஜகவினர் கொண்டாடினர்.