டெல்லியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், டேங்கர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
டெல்லியின் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் டேங்கர் லாரியில் தண்ணீர் வழங்கப்படும் நிலையில், ஓக்லா பகுதிகளில் பொதுமக்கள் தண்ணீரை முண்டியடித்து கொண்டு பிடிக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.