10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, கடலூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தபோது, பல விடைகளுக்கு மதிப்பெண் வழங்காமலும், மதிப்பெண்கள் முறையாக கூட்டாமலும் இருந்தது தெரியவந்துள்ளதாக, பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொறுப்பற்ற முறையில் விடைத்தாள்களைத் திருத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.