சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செஞ்சை ஊரணி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
நூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட காரைக்குடி நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி பல வருடங்களாக தூர்வாரப்படாமல், குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.
குளம் வறண்டு போய் பார்ப்பதற்கு வருத்தமளிப்பதாக தெரிவித்த அப்பகுதி மக்கள் குளத்தை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.