மத்தியில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டது ஒவ்வோர் இந்தியரும் பெருமைப்படக் கூடிய விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரை சந்தித்து மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரிய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, அமைச்சரவை பட்டியல் விரைவில் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு முறை மத்தியில் பாஜக மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை ஒவ்வொரு துறையிலும் கண்கூடாக பார்க்கலாம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் உலகின் தலைமை குருவாக இந்தியா மாறிவிட்டது என்று கூறிய பிரதமர் மோடி, அடுத்த ஐந்து ஆண்டு காலம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் பொருளாதார மந்ததத்தை சந்தித்த போதிலும், இந்தியா வலுவான பொருளாதாரமாக மாறியதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.