திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நத்தம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், சிறுமியை காதலிப்பதாக கூறி, திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதானார்.
அவரை நத்தம் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். வழக்கை விசாரித்த திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம், சுரேஷுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.