கும்பகோணம் திரையரங்கில் கிடந்த 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகையை போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அணைக்கரையை சேர்ந்த விஜய் என்பவர், கும்பகோணத்தில் உள்ள திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது நகை ஒன்றை கண்டெடுத்தார்.
பின்னர், அதை கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் விஜய் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில், குடவாசலை சேர்ந்த சுதா, திரையரங்கில் தவறவிட்ட நகை குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் வந்தார்.
அப்போது அவரிடம் விசாரணை நடத்தி, 12 கிராம் நகையை போலீசார் ஒப்படைத்தனர்.