வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருச்சியில் இரண்டாவது நாளாக கனமழை கொட்டி தீர்த்தது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன் படி திருச்சியில் வெயில் வாட்டிய நிலையில் கருமேகம் சூழ்ந்து திடீரென கனமழை பெய்தது.
ஸ்ரீரங்கம், அண்ணா சிலை உள்ளிட்ட பல பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.