நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள ஸ்ரீபாலஆஞ்சநேயர் ஆலயத்தில் வைகாசி திருவிழவை ஒட்டி சுவாமிக்கு பாலபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரதாபராபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீபாலஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி பெருவிழாவை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.
பின்னர் காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் 501 பால்குடங்களை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஆஞ்சநேயருக்கு பாலபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.