பிரதமராகப் பதவியேற்பதை முன்னிட்டு, டெல்லியிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்திலும் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
3-வது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்க உள்ளார். இதனை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்ற அவர் மலர் தூவி மரியாதை செய்தார்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடமான சதைவ் அடலிலும், பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் போர் நினைவிடத்திலும் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படை அதிகாரிகள் உடனிருந்தனர்.