3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு ஒடிசா கடற்கரையில் மணல் ஓவியம் வரைந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணலால் ஒவியம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த ஓவியத்தில் பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்து, அதில் மோடி 3.O என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.