தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு சம்பந்தமாக ஊடகங்கள் வெளியிட்ட தகவலால் பங்குச் சந்தையில் 31 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானதும் பங்குச் சந்தை புள்ளிகள் அதிகரித்ததாகவும், பின்னர் வாக்கு எண்ணிக்கையன்று புள்ளி விவரம் குறைந்து முதலீட்டாளர்கள் 31 லட்சம் கோடி ரூபாய் வரை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீது விசாரணை நடத்த வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.