பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெறும் தேனீர் விருந்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்க அமித் ஷா எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாட்டின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி இன்று பதவியேற்கிறார். டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் மாலை 7.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பதவியேற்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடியின் இல்லத்தில் தேனீர் விருந்து நடைபெறுகிறது.
இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா, கிரண் ரிஜிஜு, ஜோதிராதித்ய சிந்தியா, எல்.முருகன், சிவராஜ் சிங் சவுகான்,மனோகர் லால் கட்டார், எச்.டி குமாரசாமி, சிராக் பாஸ்வான், அன்னபூர்ணா தேவி, அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.