கணிதம் மற்றும் தமிழ் பாடப்பிரிவுகளில் வினாக்கள் எளிமையாக இருந்ததாக குரூப் -4 தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பதவியில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற தேர்வை, சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் மதியம் 12.45 மணிக்கு பிறகே தேர்வு அறையைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், குரூப் – 4 தேர்வில் கணிதம் மற்றும் தமிழ் பாடப்பிரிவுகளில் வினாக்கள் எளிமையாக இருந்தததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.