நாட்டிற்கு சேவை செய்ய தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வாய்ப்பு அளித்துள்ளதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் ஓர் அணியாக செயல்படுவோம் என்றும், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார்.
இதேபோல் அஜய் தம்தா, கிரிராஜ் சிங்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.