மயிலாடுதுறையில் மது போதையில் சாலையின் நடுவில் ஆடி பேருந்தை மறைத்த இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.
கச்சேரி சாலையில் உள்ள கலைஞர் நகர் பகுதியில் கோயில் திருவிழாவுக்காக மைக் செட் கட்டப்பட்டு பக்தி பாடல் ஒளிபரப்பப்பட்டது.
அப்போது மதுபோதையில் இளைஞர் ஒருவர் கருப்புசாமி பாடலுக்கு ஏற்றவாறு சாமி வந்தது போல் சாலை நடுவில் ஆடியனார். தொடர்ந்து அவ்வழியே வந்த அரசுப் பேருந்தின் மீது தனது காலை வைத்து ரகளையில் ஈடுபட்டார்.
ஒருகட்டத்தில் பேருந்தை எட்டி உதைத்தபோது, காலில் அடிபட்டு நடக்க முடியாமல் தவழ்ந்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.