சென்னை கொரட்டூர் அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூரைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் கடந்த ஒன்றாம் தேதி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
5 பேர் கொண்ட கும்பல் தன்னை கத்தியால் தாக்கியதாக மரண வாக்குமூலம்அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்த தீனதயாளன் பல பெண்களிடம் காதலிப்பதாக கூறி ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டி வந்ததும், இதனால் அவரை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 5 பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.