தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள், முறையான பராமரிப்பு இன்றி நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக அரசு பேருந்துகள் பழுதடைந்து நிற்பதும், விபத்துக்குள்ளாவதும் அதிகரித்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.
ஆனால், பழுதடைந்த 17 ஆயிரத்து 459 அரசு பேருந்துகள் கண்டறிந்து சரி செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் அறிவித்திருந்த நிலையில், தஞ்சாவூரில் இரு அரசு நகரப் பேருந்துகள் ஒரே நாளில் அச்சு முறிந்து நடுவழியில் நின்றுள்ளதாக ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் ஒரு பேருந்து கூட முழுமையாக பழுது நீக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றுவதுடன், பழைய பேருந்துகளை அனைத்தும் முறையாக பராமரித்து, உதிரி பாகங்கள் வாங்க போதிய நிதி அரசு ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.