கேரளாவிற்கு ஆரஞ்சல் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த நிலையில் தமிழக- கேரள எல்லைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை, புளியரை, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.