டெஸ்லா நிறுவனத்தைக் கலக்கி வரும் தமிழர் அசோக் எல்லுசாமியை அதன் நிறுவனர் எலான் மஸ்க் வெகுவாக பாராட்டியுள்ளார்.
டெஸ்லா நிறுவனம் தயாரிக்கும் அதிநவீன வசதிகள் கொண்ட காரில், விமானத்தில் இருப்பதைப் போன்ற ஆட்டோ பைலட் சேவை வசதி இடம்பெற்றுள்ளது.
இதை வடிவமைத்த அந்த நிறுவனத்தின் ஆட்டோபைலட் என்ஜினியரிங் பிரிவின் தலைவரான அசோக் எல்லுசாமிக்கு எலான் மஸ்க் எக்ஸ் வலைதளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அசோக் எல்லுசாமி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் என்ஜினீயரிங் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.