பரபரப்பாக நடைபெற்று வந்த ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ளது.
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஐரோப்பிய யூனியனில், 720 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இதன் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை தேர்தல் தொடங்கியது. ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான நெதர்லாந்தில் முதலாவதாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
4 நாட்களாக 20 உறுப்பு நாடுகளில் நடைபெற்று வந்த ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவு விரைவில் வெளியாகவுள்ளது.