புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டது அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கட்ராம் பெல்ஜியத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவருடன் பணிபுரிந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கிலேசி பெத் சிம்பானான் ஒபா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் தமிழர் பாரம்பரியப்படி பொண்ணு மாரியம்மன் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உறவினர்கள் மணமக்களை மலர்தூவி வாழ்த்தினர்.