தேனி மாவட்டம் கம்பம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயமடைந்தனர்.
ராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் தமது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அணைப்பட்டி அருகே சென்றபோது எதிரே 3 பேருடன் வந்த இருசக்கர வாகனம் மீது ஈஸ்வரனின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.