மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவின்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறுத்தை போன்று உருவம் தென்பட்ட நிகழ்வு பேசுப்பொருளாகியுள்ளது.
பிரதமர் மோடி உள்பட 72 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
அப்போது பாஜக எம்.பி. துர்கா தாஸ், மத்திய இணையமைச்சராக பதவியேற்ற சமயத்தில், மேடைக்குப் பின்னால் சிறுத்தை போன்று உருவம் கொண்ட விலங்கு ஒன்று சர்வசாதாரணமாக உலாவியது.
இதை ட்ரோல் செய்த நெட்டிசன்கள், அதைப் புலி என்றும் ஒருசிலர் ஏதோ வீட்டு விலங்கு என்றும் குறிப்பிட்டு, இணையத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.