திருவள்ளூர் மாவட்டம், நெமிலிச்சேரி பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் இணைப்பு கொடுக்காததால் அவதியுற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நெமிலிச்சேரி பகுதியில் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இப்பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2021-ம் ஆண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறக்கப்பட்டது.
ஆனால் இன்றளவும் தொட்டியில் தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை எனவும் பயன்பாட்டிற்கு வராதது ஏன் எனவும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் தண்ணீர் விநியோகம் சீராக இருக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.