புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குடி அருகே அமைந்துள்ள மழவராயன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சாமிக்கண்ணு – புஷ்பராணி தம்பதி, இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 3 செண்ட் நிலம் வாங்கியதாகவும், தற்போது அதனை பட்டா மாற்றம் செய்ய முயற்சிக்கும் போது சிலர் அதனை தடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த புஷ்பராணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைக்கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றனர்.