மத்திய அமைச்சரவையிலிருந்து தான் விலகுவதாக வெளியான தகவல் வதந்தி என எக்ஸ் வலைதளத்தில் சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய இணையமைச்சராக பதவியேற்ற சுரேஷ் கோபி, அமைச்சரவையில் இடம்பெற தனக்கு விருப்பமில்லை என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தகவலைத் திட்டவட்டமாக மறுத்த சுரேஷ் கோபி, இது அப்பட்டமான பொய் என்று கூறியுள்ளார். பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், கேரளாவின் செழிப்புக்கும், வளர்ச்சிக்கும் தாங்கள் கடமைப்பட்டிருப்பதாக எக்ஸ் பதிவில் சுரேஷ் கோபி குறிப்பிட்டுள்ளார்.