கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறி கெட்டு ஓடிய ஜீப்பால் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள கடையில், பொதுமக்கள் டீ குடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது சாயல்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற மகேந்திரா ஜீப் ஒன்று, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடியது. இதனை கண்டு பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியபோது, ஜீப் மோதி இருவர் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதன் பின்னர் தறிகெட்டு ஓடிய ஜீப், ஒருவழியாக மின்கம்பத்தில் மோதி நின்றது. இதற்கிடையே காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மதுரை வாலிநோக்கம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.