குறைதீர் முகாமில் அதிகாரிகள் கலந்துகொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த இந்த முகாம், 82 நாட்களுக்கு பின் நடைபெற்றது.
இதில் கள்ளிக்குடி, உசிலம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று மனு அளித்தனர்.
மேலும் இந்த முகாமில் கலந்துகொள்ளாமல் தவிர்த்த சில அதிகாரிகள், இனி வரும் கூட்டங்களில் கலந்துகொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்தார்.