அதிமுகவில் பிரிந்துள்ள சக்திகள் ஒன்றிணையாவிட்டால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலில் வெற்றி, தோல்விகள் சகஜம் எனவும், மக்களின் மனநிலையைப் பொறுத்து அது மாறும் எனவும் தெரிவித்தார்.
24 மணி நேரமும் தீவிரமாக உழைத்த அண்ணாமலையாலேயே பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்தது எனத் தெரிவித்தார்.
மேலும் அதிமுகவில் பிரிந்துள்ள சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது எனத் தெரிவித்தார்.