மத்திய இணையமைச்சராக மீண்டும் பதவியேற்ற எல்.முருகனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் திறம்பட செயல்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் எல்.முருகன் அவர்கள் முக்கிய பங்காற்றுவார் என்பது உறுதி என பதிவிட்டுள்ளார்.
















