தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பாண்டிச்சேரி வாரியர்ஸ் அணி 3 க்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பாண்டவர்மங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஹாக்கி மைதானத்தில் எங் சேலஞ்ச் ஹாக்கி கிளப் சார்பில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியின் இறுதி சுற்றில் பாண்டிச்சேரி வாரியர்ஸ் ஹாக்கி கிளப் அணியும் கோவில்பட்டி ஹாக்கி அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில் 3 க்கு 2 என்ற கோல் கணக்கில் பாண்டிச்சேரி வாரியர்ஸ் ஹாக்கி கிளப் அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது.