கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி அரசுப்பேருந்து சென்றுக்கொண்டிருந்தது, அப்போது சேத்தியாதோப்பு அருகே மர்ம நபர்கள் சிலர் பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தினர்.
இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில் மர்ம நபர்களால் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.