பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மதச்சார்பற்ற ஜனதா தள முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவை ஜூன் 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பிரஜ்வால் ரேவண்ணாவை பெங்களூரு விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர். அவரது போலீஸ் காவல் நிறைவடைந்ததால், மீண்டும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஜூன் 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.