கரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தாமதமாக வருகை தந்ததால் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் மனுக்களுடன் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காத்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தாமதமாக வந்ததால் பெரும் அவதிக்கு உள்ளாகினர். பின்னர் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வருகைதந்த மாவட்ட ஆட்சியர் மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.