சென்னையில், வீட்டு வாசலில் கழட்டி விடப்பட்ட விலை உயர்ந்த காலணியைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, தண்டையார்பேட்டையில் வைத்தியநாதன் தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 19-வது டவரில் வசித்து வரும் சதிஷ் குமார் என்பவர், தனது வீட்டு வாசலில் விலை உயர்ந்த காலணியை கழற்றிவிட்டுச் சென்றுள்ளார்.
காலையில் பார்த்தபோது காலணியை காணவில்லை என்பதால், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சதீஷ்குமார் வீட்டின் முன்பு இருந்த சிடிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, பழைய செருப்பை கழட்டிவிட்டு, புதிய விலை உயர்ந்த காலணியை இருவர் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.