ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பி.மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மனு அளித்தனர்.
அதில் தனியார் செல்போன் நிறுவனத்தின் சார்பில் டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் சிறுவர்கள், கர்ப்பிணிகள் கதிர்வீச்சால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் செல்போன் டவர் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.