மலாவி நாட்டின் துணை அதிபர் பயணித்த விமானம் மாயமானதால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மலாவி நாட்டின் துணை அதிபராக சவுலோஸ் கிளாஸ் சிலிமா இருந்து வருகிறார். இவருடன் 9 பேர் கொண்ட குழுவினர் மலாவி பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான விமானத்தில் பயணித்தனர். அப்போது விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே விமானியின் ரேடார் தொடர்பு இழந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் மாயமான விமானத்தையும், துணை அதிபரையும் தேடி வருகின்றனர்.