பாதிரியார் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் ஆளும் இடது சாரி கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த யாக்கோ படை சிரியன் திருச்சபையின் முன்னாள் பிஷப் கீவர்கீஸ் கூரிலோஸ், இடதுசாரி கட்சிகள்பாடம் கற்க வேண்டுமெனவும், கொரோனா காலத்தில் திறம்பட செயலாற்றியதால் தான் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தது எனவும் விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதிரியார்களில் கூட முட்டாள்கள் இருக்கிறார்கள் என முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள கருத்துக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.