அனைத்து தரப்பினரும் விமானத்தில் பயணம் செய்வதை உறுதி செய்வேன் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.யுமான கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சராக தனது அலுவலத்தில் பொறுப்பேற்ற பின்னர் அவர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
பிரதமர் மோடி எனக்கு ஒரு பெரிய பொறுப்பை அளித்துள்ளார். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மறுஆய்வு கூட்டத்தை நடத்தி, எதிர்காலத்தை திட்டமிடுவேன். அனைத்து பயணிகளின் சமூக, பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல், பயண அனுபவத்தை மேம்படுத்த முயற்சிப்பேன்.
“விமானத்தில் இனி அனைத்து வகுப்பினரும் பறப்பார்கள். எனவே அவர்களுக்கு சிறந்த மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்ய முயற்சிப்பேன்.
பிரதமர் மோடி எனக்கு ஒரு முக்கியமான பொறுப்பை அளித்துள்ளார், அதை நிறைவேற்ற நான் முயற்சிப்பேன். எங்கள் சந்திப்பின் போது, விமானப் போக்குவரத்துக்கு இளையவர்களின் அதிக ஈடுபாடு தேவை என்று பிரதமர் கூறியதாகவும் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.