வேலூரில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் கொடுக்க வந்த அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சி 59-வது வார்டுக்குட்பட்ட கன்சால்பேட்டை, ஆஞ்சநேயர் கோயில் தெருவில் அரசுக்கு சொந்தமான இடங்கள் அமைந்துள்ளன.
இங்கு சுமார் 45-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த வீடுகளை காலி செய்யக்கோரி திடீரென மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்ட வந்தனர். அப்போது வீடுகளை காலிசெய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.