பிறருக்கு உதவி செய்வதன் மூலம் இரவில் நிம்மதியாக உறங்க முடிகிறது என நடிகர் மதுரை முத்து தெரிவித்துள்ளார்.
மதுரை காந்தி அருங்காட்சிய உள்ளரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் மதுரை முத்து 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், நடிகர் ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் பிறருக்கு உதவி செய்வதைக் கண்டு, மற்ற நடிகர்களும் உதவ முன்வருவார்கள் என்று குறிப்பிட்டார்.