காஞ்சிபுரத்தில் மூடப்படாத கழிவுநீர் கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் புத்தேரி தெருவில் மூன்று முக்கிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள மிகப்பெரிய கழிவுநீர் கால்வாய் மூடப்படாத நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் பணி நடைபெற்ற நிலையில், ஊழியர்கள் சரிவர கால்வாயை மூடாமல் மணல் மூட்டைகளை வீசி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அங்கன்வாடி குழந்தைகள், வாகன ஓட்டிகள் கழிவுநீர் கால்வாயில் விழும் அபாயம் உள்ளதால், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.