திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் நட்சத்திர ஏரிக்குள் பாய்ந்தது.
புதுப்புத்தூரைச் சேர்ந்த 2 கர்ப்பிணி பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் மருத்துவ பரிசோதனைக்காக கொடைக்கானலுக்கு ஜீப்பில் வந்துள்ளனர்.
பெண்களை இறக்கிவிட்ட பின்னர் நட்சத்திர ஏரி சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த ஜீப்பானது, எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்தது.
இதையடுத்து ஜீப்பிற்குள் சிக்கிய ஜெயபிரகாஷ், காளிமுத்து ஆகிய இருவரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த பெண் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.